புரட்சித்தலைவி அம்மா

 • 1948
  பிப்ரவரி 24 ஆம் தேதி மேலுகூட் என்னும் மைசூரில்(கர்நாடகா) உள்ள ஊரில் திரு.ஜெயராம் மற்றும் திருமதி.வேதவல்லி தம்பதியினருக்கு மகளாக பிறந்து கோமளவல்லி என்ற பாரம்பரிய பெயரை சூட்டினர்.ஜெயலலிதா என்ற பெயரை ஒரு வயதில் வைத்தனர். அம்மு என்று அவருடைய அம்மாவாலும், குடும்பத்தினராலும் அழைக்கப்பட்டார்.
 • 1950- 1958
  பிஷோப் காட்டன் பெண்கள் பள்ளியில் படித்தார்.
 • 1958- 1964
  பள்ளிப்படிப்பை புனித இருதய பள்ளியில் முடித்தார்.புரட்சி தலைவி அம்மா படிப்பில் சிறந்து விளங்கினார். சிறந்த மாணவியாக கல்வித்தொகை பெற்றார். பள்ளிபடிப்பை முடித்து ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் சட்டப்படிப்பில் சேர்ந்து பாதியிலேயே நிறுத்தும்படியும் அமைந்தது. கர்நாடக சங்கீதம், மேற்கத்திய பாரம்பரிய பியானோ மற்றும் பலவிதமான நடனங்கள் ஆகிய பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினியாட்டம், மணிப்புரி கதக் உள்ளிட்ட அனைத்திலும் தேர்ச்சிப்பெற்றார்.
 • 1964 – 1973
  புரட்சி தலைவி அம்மா அவர்கள் தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் 1964 இல் அறிமுகமானார். தமிழில் 1965 இல் அறிமுகமாகி பிரபல நடிகையாக வலம் வந்தார். புரட்சி தலைவி அம்மா அவர்கள் தமிழில் நாயகியாக நடித்த 92 படங்களில் 85 படங்கள் வெள்ளி விழாவை கொண்டாடியது. தெலுங்கில் 28 வெள்ளி விழா படங்களில் நடித்துள்ளார். 1965–1980 களில் மிக அதிக சம்பளம் வாங்கிய ஒரே இந்திய நடிகை.
 • 1964 – 1973
  9 படங்களில் கௌரவ தோற்றத்தில் நடித்தார் மற்றும் அவரது 6 படங்கள் மொழிமாற்றம் செய்து ஹிந்தியில் வெளியிடப்பட்டது. 9 படங்களில் கௌரவ தோற்றத்தில் நடித்தார் மற்றும் அவரது 6 படங்கள் மொழிமாற்றம் செய்து ஹிந்தியில் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டின் மாநில திரைப்பட விருது – 5 தமிழுக்கான Filmfare விருது – 5, தெலுங்குக்கான filmfare விருது - 1 தமிழ்நாட்டின் ரசிகர்கள் விருது – 8 சென்னை திரைப்பட சங்க விருதுகள் 7, ரஷ்ய திரைப்பட விழாவில் 1 விருதும் பெற்றவர்.
 • அரசியல் வாழ்க்கை
  புரட்சி தலைவரால் ஆரம்பிக்கப்பட்ட அஇஅதிமுகவில் புரட்சி தலைவி அம்மா இணைந்தார். அஇஅதிமுகவின் அரசியல் கூட்டத்தின்போது தன் கன்னி மேடைபேச்சான “பெண்ணின் பெருமை” (“The Greatness of Woman”) என்ற தலைப்பில் பேசினார்..
 • 1983
  புரட்சி தலைவி அம்மா கொள்கைபரப்பு செயலாளராக பொறுப்பேற்றார். திருச்செந்தூர் தொகுதியின் இடைத்தேர்தல் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 • 1984-1989
  புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆங்கிலப் புலமையால் ராஜ்ய சபாவின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அஇஅதிமுக வின் பாராளுமன்றத்தின் துணை குழுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 • 1988
  அஇஅதிமுக வின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 • 1989
  முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர் என்ற பெருமை புரட்சி தலைவி அம்மா அவர்களை சேரும்.திமுக உறுப்பினர்களால் தாக்கப்பட்ட புரட்சி தலைவி அம்மா திரு.கருணாநிதி ஆட்சியில் இருக்கும்வரை சட்டசபை செல்ல மாட்டேன் என்று சபதம் எடுத்தார்.
 • 1991
  பெரிய எண்ணிக்கையிலான உறுப்பினர்களை கொண்டு புரட்சி தலைவி அம்மா அவர்கள் தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்றார்.
 • 1992
  “தொட்டில் குழந்தை திட்டம்” புரட்சி தலைவி அம்மா அவர்களால் தொடங்கப்பட்டது. புரட்சி தலைவி அம்மா அவர்கள் “அனைத்து மகளிர் காவல் நிலையம்” அறிமுகப்படுத்தினார். புரட்சி தலைவி அம்மா அவர்கள் காவல்துறையின் அனைத்து பிரிவிலும் பெண்களுக்கான வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு 30% சதவிகிதம் ஆக்கினார். 57 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டன.
 • 2001
  புரட்சி தலைவி அம்மா தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார்.
 • 2002
  புரட்சி தலைவி அம்மா ஆண்டிபட்டி இடைதேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார். “பெண் போலீஸ் கமாண்டோ” உருவாக்கிய பெருமை அம்மா அவர்களின் ஆட்சியைச் சேரும்.
 • 2011
  புரட்சி தலைவி அம்மா அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 • 2011-2016
  புரட்சி தலைவி அம்மா அவர்கள் மக்கள் நலத்திட்டங்களான அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம், அம்மா உப்பு, அம்மா சிமெண்ட் போன்றவற்றை துவக்கி வைத்தார்.
 • 2016
  புரட்சி தலைவி அம்மா அவர்கள் R.K.நகர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சராக பதவியேற்றார். இரண்டு முறை தொடர்ந்து முதலமைச்சராக பதவியேற்ற பெருமை புரட்சி தலைவி அம்மா அவர்களை சேரும்.
 • 2016

  a) டாஸ்மாக் கடைகள் காலை 10 மணிக்கு முன்னதாக திறக்கப்படாமல் நண்பகல் 12 மணிக்கு திறக்கவும், இரவு 10 மணி வரை செயல்படவும் உத்தரவிட்டார். 500 சில்லறை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
  b) பயிர் கடன்கள் தள்ளுபடி செய்தார்.
  c) திருமணத்திற்கான “தாலிக்கு” 8 கிராம் தங்கம் வழங்க உத்தரவிட்டார்.
  d) 100 அலகுகள் வரை கட்டணமில்லா மின்சாரம் வழங்க உத்தரவிட்டார்.
  e) கைத்தறி நெசவாளர்களுக்கு 250 அலகுகள் வரை கட்டணமில்லா மின்சாரமும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 அலகுகள் வரை கட்டணமில்லா மின்சாரம் விநியோகிக்கப்படும் என்று புரட்சி தலைவி அம்மா அறிவித்தார்.
  டிசம்பர் 5ஆம் தேதி புரட்சி தலைவி அம்மா அவர்கள் இயற்கை எய்தினார்.
 • மொழித்திறன்
  புரட்சி தலைவி அம்மா அவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி, இங்கிலீஷ் போன்ற பல மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர்.புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளும் பாராட்டுகளும்
 • 1972
  தமிழ்நாடு அரசு வழங்கிய கலைமாமணி விருதை பெற்றார்.
 • 1991
  சென்னை பல்கலைக்கழகம் இலக்கியத்திற்கான டாக்டர் பட்டம் அளித்தது..
 • 1992
  டாக்டர்.எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் அறிவியலில் டாக்டர் பட்டம் வழங்கியது.
 • 1993
  மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் “ Doctor of Letters” என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது.
 • 2003
  தமிழ்நாட்டின் வேளாண்மை பல்கலைக்கழகம் அறிவியலில் டாக்டர் பட்டம் கொடுத்தது. பாரதிதாசன் பல்கலைக்கழகம் “ Doctor of Letters” என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது.
 • 2004
  லண்டன் இல் உள்ள “House of Lords” இல் புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு “Asian Guild” விருது சார்பில் “சிறந்த பெண் அரசியல்வாதி” என்ற விருதை பெற்றார் புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு “Golden Star of Honour Dignity Award” சர்வேதேச மனிதஉரிமைகள் பாதுகாப்பு குழு சார்பில், நலிவுபெற்ற சமுடயத்திர்க்காகவும், ஆண் பெண் சமத்துவத்திர்க்காகவும் செய்த சேவைகளுக்காக புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு வழங்கப்பட்டது.
 • 2011
  மக்கள் நலப்பணிக்காக தன்னை அர்ப்பணித்த மிகச் சிறந்த தலைவர் “புரட்சி தலைவி அம்மா” என்ற தீர்மானம் New Jersey மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
 • புரட்சி தலைவி அம்மா அவர்கள் ஆண்ட பொற்காலங்கள்:
  1. முதல் ஆட்சி காலம் : 24.06.1991 -12.05.1996 -12.05.1996
  2. இரண்டாவது ஆட்சி காலம் : 14.05.2001- 21.09.2001
  3. முன்றாவது ஆட்சி காலம் : 02.03.2002-12.05.2006
  4. நான்காவது ஆட்சி காலம் : 16.05.2011- 27.09.2014
  5. ஐந்தாவது ஆட்சி காலம் : 23.05.2015 -16.05.2016
  6. ஆறாவது ஆட்சி காலம் : 23.05.2016- 05.12.2016
பகிர்