எங்கள் தலைவர்கள்

எம்.ஜி.ஆர்

மேலும் தகவல்

சின்னம்மா

மேலும் தகவல்

அண்ணா

 • 1909
  நடராஜன் – பங்காரு அம்மாள் தம்பதியினருக்கு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் மகனாக பிறந்தார். இவர் நெசவாளர் குடும்பத்தை சேர்ந்தவர்.
 • 1914
  காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பா பள்ளியில் படித்தார்.
 • 1927
  ஒரு சில மாதங்கள் கிளெர்க்காக காஞ்சிபுர நகராட்சியில் பணி புரிந்தார்.
 • 1930
  மாசிலாமணி முதலியார் என்னும் மருத்துவரால் நடத்தப்பட்ட தமிழரசு என்னும் பத்திரிக்கையில் அண்ணாவின் முதல் கட்டுரையான “மஹிலர் கோட்டம்” வெளியிடப்பட்டது.
 • 1934
  ஈ.வெ.ரா மற்றும் பெரியார் என்று அழைக்கப்படும் ஈ.வெ.ராமசாமியை திருப்பூரில் சந்தித்தார். தன் தலைவராக அவரை ஏற்றுக்கொண்டார்.
 • 1936
  நீதிக்கட்சி வேட்பாளராக சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டார். பேடுநாயக்கன்பேட்டையில் தோல்வியை தழுவினார்.
 • 1938
  “விடுதலை”,”குடியரசு” என்ற தமிழ் பத்திரிக்கையில் மற்றும் “ஜஸ்டிஸ்” என்கின்ற ஆங்கில பத்திரிக்கையில் இணை ஆசிரியராக பணியாற்றினார்
  ஈ.வெ.ரா அவர்களின் தலைமையில் நடைபெற்ற முதல் ஹிந்தி எதிர்ப்பு கிளர்ச்சி சமயத்தில் நன்கு மதங்கள் சிறைக்குசென்றார்.
 • 1939
  நீதிக்கட்சியின் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 • 1940
  பி.ஆர்.அம்பேத்கர் மற்றும் ஈ.வெ.ரா கூட்டத்தில் ஒரு மொழி பெயர்ப்பாளராக செயல்பட்டார்.
 • 1944
  சி.என்.அண்ணாதுரையின் தீர்மானம் முன்மொழியப்பட்டதால், சேலத்தில் நடந்த நீதிகட்சியின் மாநாட்டில் திராவிட கழகம் தோன்றியது.
 • 1947
  ஈ.வெ.ரா பெரியார், ஆகஸ்ட் 15 – சுதந்திர தினத்தை துக்கநாளாக அறிவித்திருந்தார். “திராவிட நாடு” என்னும் கட்டுரையில் அந்த நாளினை, காலனித்துவ ஆட்சியின் அகற்றுதலாக கொண்டாடப்படுமாறு அறிவுறுத்தினார்.
 • 1949
  ஈ.வெ.ரா பெரியார் மற்றும் மணியம்மை திருமணமான சில மாதங்களுக்குப் பிறகு, திராவிட கழகத்திலிருந்து விலகி “திராவிட முன்னேற்ற கழகத்தை” ராயபுரத்தில் உள்ள ராபின்சன் பார்க்கில் தொடங்கி வைத்தார்.
 • 1950
  “ஆர்ய மாயை” என்ற புத்தகத்தை படைத்தபின் ஆறு மதங்கள் சிறைவாசம் செய்யப்பட்டார்.
 • 1952
  தி.மு.க – முதல் பொது தேர்தலில் பங்கேற்கவில்லை.
 • 1956
  திருச்சியில் நடந்த மே மாத மாநாட்டிற்குபிறகு, தி.மு.க பொது தேர்தலை சந்திக்க முடிவு செய்தது.
 • 1957
  இரண்டாம் பொது தேர்தலில் 15 இடங்களில் தி.மு.க வெற்றி பெற்றது. சி.என்.அண்ணாதுரை கசிபுரம் தொகுதியில் வென்றார்.
 • 1958
  கருப்பு கொடி ஆர்பாட்டத்தை ஜவஹர்லால் நேரு சென்னைக்கு வரும் நேரத்தில் திட்டமிடிருந்ததால், அவரை ஜனவரி மாதம் கைது செய்தனர்.
 • 1962
  மூன்றாவது பொதுத்தேர்தலின் போது காஞ்சிபுரம் தொகுதியில் தோற்கடிக்கடிக்கபட்டார். பின்னர், மாநிலங்கவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 • 1963
  ஜனவரி மாதம், “திராவிட நாடு” என்ற தி.மு.க கோரிக்கையை இடைநீக்கம் செய்தார்.
 • 1965
  ஹிந்தி மொழியை ஆட்சி மொழியாக பரிந்துரை செய்யப்பட்டதை தொடர்ந்து, குடியரசு தினத்தை கருப்பு நல என்று விவரித்த காரணத்தால், ஜனவரி மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்.
  ஜூலை மாதத்தில் சிங்கபோரே, மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, ஜப்பான் நாடுகளுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டார்.
 • 1967
  சட்டமன்ற பொதுத்தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றதை தொடர்ந்து மார்ச் மாதம் முதல்வர் ஆனார். ஏப்ரல் மாதம் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றார். ரூ.1 க்கு அரிசி திட்டம் மே மாதத்தில் துவக்கி வைத்தார். இந்த திட்டத்தை சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் ஆகஸ்ட் மாதத்தில் திறந்து வைத்தார். ஜூலை மாதத்தில் நடந்த சட்டசபையில் தமிழ்நாட்டை சென்னை மாநிலமாக மறுபெயரிட ஏகமனதாக தீர்மானம் ஏற்றப்பட்டது. செப்டம்பர் மாதத்தில் கூவம் மேம்பாட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
 • 1968
  ஜனவரி மாதத்தில் உலக தமிழ் மாநாடு சென்னையில் நடைப்பெற்றது.
  திருக்குறளின் ஆராய்ச்சிக்காக 9 லட்சம் மாநில பல்கலைகழகத்திற்கு ஒதுக்கப்பட்டது. ஏப்ரல் மற்றும் மே மாதத்தில்அமெரிக்காவின் அழைப்பால் அமெரிக்க சென்றார், ஜப்பானிற்கும் சென்றார். செப்டம்பர் மாதத்தில் அண்ணாமலை பல்கலைகழகத்தின் மதிப்பிற்குரிய டாக்டர் பட்டம் பெற்றார்.
  செப் 10 இல், சிகிச்சைக்காக நியூயார்க் சென்றார். செப் 10 நியூயார்க்கில் உள்ள மன்ஹட்டன் மருத்துவனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு நவம்பர் 6ஆம் தேதி சென்னை திரும்பினார்.
  மருத்துவ ஆலோச்சனைக்கு எதிராக, மாநிலம் பெயர் மாற்றம் செயல்பாட்டிற்காக டிசம்பர் 1ஆம் தேதி உரையாற்றினார்.
 • 1969
  “கலைவாணர்” திரு.என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் சிலையை, சென்னை தி.நகரில் பொங்கல் அன்று(ஜனவரி 14) அமைத்தார். அண்ணா அவர்களின் கடைசி பொதுக்கூட்டம் ஆகும்.
  பிப்ரவரி 3: 12.22 மணிக்கு தனது இறுதி மூச்சினை இழந்தார்.
  பிப்ரவரி 4: அரசு மரியாதையுடன் மெரீனா கடற்கரையில் அவரது பூத உடலுக்கு மரியாதை செய்து அடக்கம் செய்யப்பட்டது.

எம்.ஜி.ஆர்

 • 1917
  மருதூர் கோபாலன் ராமசந்திரன், ஜனவரி 17ஆம் தேதி 1917இல் கண்டி என்னும் சிலோன(ஸ்ரீலங்கா) நாட்டில் மேலகாத் கோபால மேனன் சத்தியபாமாவுக்கும், மருதூர் மகனாக பிறந்தார். இவரை சுருக்கமாக எம்.ஜி.ஆர். என்று பிரபலமாக அழைக்கப்பட்டார்.
 • 1930 To 1950
  ஒரு நடிகராக, எம்.ஜி.ஆர் அவர்கள் இந்தியாவிலேயே தலைசிறந்த நடிகராகவும், மக்களை கவர்ந்தவராகவும் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் 1930இல், திரையுலகில் ஈடுபடுத்திக் கொண்டாலும், 1950 இல் புகழின் உச்சிக்கு சென்றார்.இவர் நடித்த படங்களான “மந்திரிகுமாரி”,”மலைகண்ணன்”,”அலிபாபாவும் 40 திருடர்களும்”,”திருடாதே”,”எங்க வீட்டு பிள்ளை”,”ஆயிரத்தில் ஒருவன்”,”அன்பே வா”,”மகாதேவி”,”பணம் படைத்தவன்”,”உலகம் சுற்றும் வாலிபன்” போன்ற படங்கள் எவரது செயல்திறனை வெளிப்படுத்தின.
 • 1936
  “எல்லிஸ் டங்குன்” என்கின்ற அமெரிக்காவில் பிறந்த இயக்குனர் இயக்கிய “சதிலீலாவதி” என்ற தமிழ் படத்தை எடுத்து எம்.ஜி.ஆர். அவருக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தினார்.
 • 1942 – 1962
  தங்கமணி என்கின்ற சித்திரகுளம் பார்கவி அவர்களை திருமணம் செய்து கொண்டார்.1942 இல் பார்கவி இறந்தார்.எம்.ஜி.ஆர். அவர்கள் சதானந்தாதேவியை மறுமணம் செய்து கொண்டார். இவரும் காசநோய் பாதிப்பால் 1962இல் மரணம் அடைந்தார். வி.என்.ஜானகி(நடிகை) அவர்களை எம்.ஜி.ஆர். மணந்து கொண்டார்.
 • 1950 – 1954
  “மந்திரி குமாரி” படத்தில் நடித்ததின் மூலம் எம்.ஜி.ஆர் வாழ்வில் திருப்புமுனையாக திருப்புமுனை படமாக அமைந்தது.இதைத் தொடர்ந்து 1954இல் வெளிவந்த “மலைக்கண்ணன்” படத்தில் நடித்து வெற்றி நடிகர் ஆனார்.
 • 1953
  எம்.ஜி.ஆர் மற்றும் சி.என்.அண்ணாதுரை இடையிலான உறவு மாணவன் – சீடனாக இருந்தது. 1953இல் அண்ணாதுரை அவர்களின் புதிய திராவிட கட்சியில் இணைந்தார்.
 • 1953
  அண்ணாதுரை அவர்களோடு இணைந்து அரசியலில் ஈடுபட்ட எம்.ஜி.ஆர், ஒரு திராவிட தேசியவாதியாகவும், ஒரு முக்கிய உறுப்பினராகவும் வலம் வந்தார். அவருடைய நட்சத்திர அந்தஸ்து அவரை இன்னும் பிரபலமானவராக மிகுந்த கவர்ச்சியை சேர்ந்தது.
 • 1955
  1955இல் வெளிவந்த “அலிபாபாவும் 40 திருடர்களும்” படம் மூலம் அவரது புகழ் மேலோங்கி, முதல் வண்ண படத்தில் நடித்த பெருமையை சேர்த்தது. “திருடாதே”, “எங்க வெட்டு பிள்ளை”, “ஆயிரத்தில் ஒருவன்”, “அன்பே வா”, “மகாதேவி”, “பணம் படைத்தவன்”, “உலகம் சுற்றும் வாலிபன்” ஆகிய படங்கள் மூலம் கோடிகணக்கான மக்களின் உள்ளங்களில் குடியேறினார்.
 • 1962 – 1969
  1962இல் மாநில சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பின், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தி.மு.க நிறுவனர் அண்ணா அவர்களின் மரணத்திற்குப்பின் பொருளாளராக பணியாற்றினார்.
 • 1967
  எம்.ஜி.ஆர் அவர்களின் சக நடிகரான எம்.ஆர்.ராதா இரண்டு முறை எடது காதினை நோக்கி சுட்டதால்,அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் அவருக்கு இடது காது கேட்பதில் திறன் இழந்து, அவரது குரலும் நிரந்தரமாக மாறிவிட்டது.
 • 1972
  அண்ணா அவர்களின் மறைவிற்குப்பின், கருணாநிதி தி.மு.க தலைவரானார். கட்சியின் நிதி விவரங்களை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டதால் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
 • 1972 – 1977
  எம்.ஜி.ஆர் பல இடங்களுக்குச் சென்று தன கட்சி கொள்கைகளை பரப்பினார்.அவர் நடித்த படங்களான “நேற்று இன்று நாளை”, “இதயக்கனி”, “இன்று போய் என்றும் வாழ்க” போன்ற படங்கள் மூலம் தன் கட்சி கொள்கையினை பரவச்செய்தார்.
 • 1974
  சென்னை பல்கலைக்கழகம் மற்றும், உலக பல்கலைக்கழகமான அரிசேனா பல்கலைகழகமும் எவருக்கு கௌரவ டாக்டர் பட்டதுடன் பாராட்டு தெரிவித்தது.
 • 1977
  எம்.ஜி.ஆர். அவர்களின் அஇஅதிமுக, திமுக வை தோற்கடித்தது. முதல்வராக பதவியேற்ற எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் சமூக வளர்ச்சியை வலியுறுத்தினார்.முன்னால் முதல்வர் கே.காமராஜ் அவர்களின் “மதிய உணவு திட்டம்” என்பதை “எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டமாக மாற்றி, சத்து உருண்டைகளை அளித்தார். இலவச பள்ளிகளை கோடம்பாக்கத்தில் திறந்து வைத்தார்.
 • 1980
  கல்வித்துறையை தவிர, பெண்களின் முன்னேற்றத்திற்காக பெண்களை மையப்படுத்தி பேருந்துகளை அறிமிகம் செய்தார். கலாச்சார மற்றும் பாரம்பரியம் மிக்க கோயில்களின் சிலைகளையும் பதுகத்தர்.எதனால் சுர்ருலத்துரை மேன்மை அடைந்தது. மதுக்கடைகளின் தடை மூலம் மாநிலம் முழுவதும் ஆன்மீக வழியில் ஈடுபட செய்தற். அவரது அரசு சார்பு கொள்கைகள் 1980 தேர்தலில் வெற்றி பெற உதவியது.
 • 1984
  எம்.ஜி.ஆர் அவர்கள் உயர் சிகிச்சைக்காக அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்டார்.அவர் தமிழகத்தில் இல்லை என்றாலும் அவரது பெயரும்,புகழும் அஇஅதிமுக வுக்கு வெற்றியைத்தந்தது. காங்கிரஸ் – அஇஅதிமுக விடம் இணைந்தது.
 • 1984
  எம்.ஜி.ஆர் அவர்களுக்கு சிறுநீரக செயலிழப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நீரிழிவு, பக்கவாதம் இணைந்து ஒரு லேசான மாரடைப்பு ஏற்பட உடல்நிலை சிக்கலானது. இதனால் சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக அமெரிக்காவில் ப்ரூக்ளின் இல் உள்ள DOWNSTATE மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
 • 24 டிசம்பர் 1987
  அமெரிக்காவில் நீண்டகாலம் சிகிச்சை எடுத்து கொண்ட பிறகும், பிணியில் இருந்து மீளவில்லை.தனது 71 வயதில் இறுதி மூச்சினை டிசம்பர் 24, 1987 இல் 3.30 மணியளவில் அப்போல்லோ மருத்துவமனையில் உயிர் இழந்தார்.
 • 1988
  எம்.ஜி.ஆர் அவர்களின் மறைவுக்குப்பின், அவருடைய அஇஅதிமுக கட்சி இரண்டாக பிரிந்தது. மீண்டும் 1988 இல் இணைந்தது.
 • 1989
  எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவாக காது கேளதோர்க்கான விடுதி மற்றும் மேல்நிலைப்பள்ளியை ராமாவரத்தில் அமைக்கப்பட்டது.
 • 1989
  அவரது இல்லத்தை “எம்.ஜி.ஆர் நினைவு இல்லம்” என்று அமைத்து, பொது மக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்பட்டது.அவரது “சத்யா ஸ்டுடியோஸ்” மகளிர் கல்லூரியாக மாற்றப்பட்டது.

புரட்சித்தலைவி அம்மா

 • 1948
  பிப்ரவரி 24 ஆம் தேதி மேலுகூட் என்னும் மைசூரில்(கர்நாடகா) உள்ள ஊரில் திரு.ஜெயராம் மற்றும் திருமதி.வேதவல்லி தம்பதியினருக்கு மகளாக பிறந்து கோமளவல்லி என்ற பாரம்பரிய பெயரை சூட்டினர். அம்மு என்று அவருடைய அம்மாவாலும், குடும்பத்தினராலும் அழைக்கப்பட்டார்.
 • 1950- 1958
  பிஷோப் காட்டன் பெண்கள் பள்ளியில் படித்தார்.
 • 1958- 1964
  பள்ளிப்படிப்பை புனித இருதய பள்ளியில் முடித்தார்.புரட்சி தலைவி அம்மா படிப்பில் சிறந்து விளங்கினார். சிறந்த மாணவியாக கல்வித்தொகை பெற்றார். பள்ளிபடிப்பை முடித்து ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் சட்டப்படிப்பில் சேர்ந்து பாதியிலேயே நிறுத்தும்படியும் அமைந்தது. கர்நாடக சங்கீதம், மேற்கத்திய பாரம்பரிய பியானோ மற்றும் பலவிதமான நடனங்கள் ஆகிய பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினியாட்டம், மணிப்புரி கதக் உள்ளிட்ட அனைத்திலும் தேர்ச்சிப்பெற்றார்.
 • 1964 – 1973
  புரட்சி தலைவி அம்மா அவர்கள் தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் 1964 இல் அறிமுகமானார். தமிழில் 1965 இல் அறிமுகமாகி பிரபல நடிகையாக வலம் வந்தார். புரட்சி தலைவி அம்மா அவர்கள் தமிழில் நாயகியாக நடித்த 92 படங்களில் 85 படங்கள் வெள்ளி விழாவை கொண்டாடியது. தெலுங்கில் 28 வெள்ளி விழா படங்களில் நடித்துள்ளார். 1965–1980 களில் மிக அதிக சம்பளம் வாங்கிய ஒரே இந்திய நடிகை.
 • 1964 – 1973
  9 படங்களில் கௌரவ தோற்றத்தில் நடித்தார் மற்றும் அவரது 6 படங்கள் மொழிமாற்றம் செய்து ஹிந்தியில் வெளியிடப்பட்டது. 9 படங்களில் கௌரவ தோற்றத்தில் நடித்தார் மற்றும் அவரது 6 படங்கள் மொழிமாற்றம் செய்து ஹிந்தியில் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டின் மாநில திரைப்பட விருது – 5 தமிழுக்கான Filmfare விருது – 5, தெலுங்குக்கான filmfare விருது - 1 தமிழ்நாட்டின் ரசிகர்கள் விருது – 8 சென்னை திரைப்பட சங்க விருதுகள் 7, ரஷ்ய திரைப்பட விழாவில் 1 விருதும் பெற்றவர்.
 • அரசியல் வாழ்க்கை
  புரட்சி தலைவரால் ஆரம்பிக்கப்பட்ட அஇஅதிமுகவில் புரட்சி தலைவி அம்மா இணைந்தார். அஇஅதிமுகவின் அரசியல் கூட்டத்தின்போது தன் கன்னி மேடைபேச்சான “பெண்ணின் பெருமை” (“The Greatness of Woman”) என்ற தலைப்பில் பேசினார்..
 • 1983
  புரட்சி தலைவி அம்மா கொள்கைபரப்பு செயலாளராக பொறுப்பேற்றார். திருச்செந்தூர் தொகுதியின் இடைத்தேர்தல் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 • 1984-1989
  புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆங்கிலப் புலமையால் ராஜ்ய சபாவின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அஇஅதிமுக வின் பாராளுமன்றத்தின் துணை குழுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 • 1988
  அஇஅதிமுக வின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 • 1989
  முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர் என்ற பெருமை புரட்சி தலைவி அம்மா அவர்களை சேரும்.திமுக உறுப்பினர்களால் தாக்கப்பட்ட புரட்சி தலைவி அம்மா திரு.கருணாநிதி ஆட்சியில் இருக்கும்வரை சட்டசபை செல்ல மாட்டேன் என்று சபதம் எடுத்தார்.
 • 1991
  பெரிய எண்ணிக்கையிலான உறுப்பினர்களை கொண்டு புரட்சி தலைவி அம்மா அவர்கள் தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்றார்.
 • 1992
  “தொட்டில் குழந்தை திட்டம்” புரட்சி தலைவி அம்மா அவர்களால் தொடங்கப்பட்டது. புரட்சி தலைவி அம்மா அவர்கள் “அனைத்து மகளிர் காவல் நிலையம்” அறிமுகப்படுத்தினார். புரட்சி தலைவி அம்மா அவர்கள் காவல்துறையின் அனைத்து பிரிவிலும் பெண்களுக்கான வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு 30% சதவிகிதம் ஆக்கினார். 57 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டன.
 • 2001
  புரட்சி தலைவி அம்மா தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார்.
 • 2002
  புரட்சி தலைவி அம்மா ஆண்டிபட்டி இடைதேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார். “பெண் போலீஸ் கமாண்டோ” உருவாக்கிய பெருமை அம்மா அவர்களின் ஆட்சியைச் சேரும்.
 • 2011
  புரட்சி தலைவி அம்மா அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 • 2011-2016
  புரட்சி தலைவி அம்மா அவர்கள் மக்கள் நலத்திட்டங்களான அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம், அம்மா உப்பு, அம்மா சிமெண்ட் போன்றவற்றை துவக்கி வைத்தார்.
 • 2016
  புரட்சி தலைவி அம்மா அவர்கள் R.K.நகர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சராக பதவியேற்றார். இரண்டு முறை தொடர்ந்து முதலமைச்சராக பதவியேற்ற பெருமை புரட்சி தலைவி அம்மா அவர்களை சேரும்.
 • 2016

  a) டாஸ்மாக் கடைகள் காலை 10 மணிக்கு முன்னதாக திறக்கப்படாமல் நண்பகல் 12 மணிக்கு திறக்கவும், இரவு 10 மணி வரை செயல்படவும் உத்தரவிட்டார். 500 சில்லறை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
  b) பயிர் கடன்கள் தள்ளுபடி செய்தார்.
  c) திருமணத்திற்கான “தாலிக்கு” 8 கிராம் தங்கம் வழங்க உத்தரவிட்டார்.
  d) 100 அலகுகள் வரை கட்டணமில்லா மின்சாரம் வழங்க உத்தரவிட்டார்.
  e) கைத்தறி நெசவாளர்களுக்கு 250 அலகுகள் வரை கட்டணமில்லா மின்சாரமும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 அலகுகள் வரை கட்டணமில்லா மின்சாரம் விநியோகிக்கப்படும் என்று புரட்சி தலைவி அம்மா அறிவித்தார்.
  டிசம்பர் 5ஆம் தேதி புரட்சி தலைவி அம்மா அவர்கள் இயற்கை எய்தினார்.
 • மொழித்திறன்
  புரட்சி தலைவி அம்மா அவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி, இங்கிலீஷ் போன்ற பல மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர்.புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளும் பாராட்டுகளும்
 • 1972
  தமிழ்நாடு அரசு வழங்கிய கலைமாமணி விருதை பெற்றார்.
 • 1991
  சென்னை பல்கலைக்கழகம் இலக்கியத்திற்கான டாக்டர் பட்டம் அளித்தது..
 • 1992
  டாக்டர்.எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் அறிவியலில் டாக்டர் பட்டம் வழங்கியது.
 • 1993
  மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் “ Doctor of Letters” என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது.
 • 2003
  தமிழ்நாட்டின் வேளாண்மை பல்கலைக்கழகம் அறிவியலில் டாக்டர் பட்டம் கொடுத்தது. பாரதிதாசன் பல்கலைக்கழகம் “ Doctor of Letters” என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது.
 • 2004
  லண்டன் இல் உள்ள “House of Lords” இல் புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு “Asian Guild” விருது சார்பில் “சிறந்த பெண் அரசியல்வாதி” என்ற விருதை பெற்றார் புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு “Golden Star of Honour Dignity Award” சர்வேதேச மனிதஉரிமைகள் பாதுகாப்பு குழு சார்பில், நலிவுபெற்ற சமுடயத்திர்க்காகவும், ஆண் பெண் சமத்துவத்திர்க்காகவும் செய்த சேவைகளுக்காக புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு வழங்கப்பட்டது.
 • 2011
  மக்கள் நலப்பணிக்காக தன்னை அர்ப்பணித்த மிகச் சிறந்த தலைவர் “புரட்சி தலைவி அம்மா” என்ற தீர்மானம் New Jersey மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
 • புரட்சி தலைவி அம்மா அவர்கள் ஆண்ட பொற்காலங்கள்:
  1. முதல் ஆட்சி காலம் : 24.06.1991 -12.05.1996 -12.05.1996
  2. இரண்டாவது ஆட்சி காலம் : 14.05.2001- 21.09.2001
  3. முன்றாவது ஆட்சி காலம் : 02.03.2002-12.05.2006
  4. நான்காவது ஆட்சி காலம் : 16.05.2011- 27.09.2014
  5. ஐந்தாவது ஆட்சி காலம் : 23.05.2015 -16.05.2016
  6. ஆறாவது ஆட்சி காலம் : 23.05.2016- 05.12.2016
பகிர்