அஇஅதிமுக வரலாறு

 • 2017
  திரு. டி.டி.வி. தினகரன் கழகத்தின் துணை பொது செயலராக நியமனம், திரு. திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் கழகத்தின் பொருளாராக நியமனம்.
 • 2017
  அ.இ.அ.தி.மு.க சட்டமன்ற கட்சி தலைவராக மதிப்புக்குரிய சின்னம்மா தேர்வு.
 • 2016
  அஇஅதிமுக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது.புரட்சி தலைவரின் மறைவிற்கு பிறகு 2 முறை தொடர்ந்து முதலமைச்சராக பதவியேற்ற பெருமை புரட்சி தலைவி அம்மா அவர்களை சேரும்.
  அம்மாவின் மறைவிற்கு பின் மதிப்புக்குரிய சின்னம்மா அவர்கள் அஇஅதிமுக வின் பொதுசெயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கபட்டார்
 • 2015
  புரட்சி தலைவி அம்மா அவர்க்கு எதிராக தொடரப்பட்ட பொய் வழக்கில் இருந்து விடுதலையானார் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பதவியேற்றார்.
 • 2014
  அஇஅதிமுக பாராளுமன்றத் தேர்தலில் 37 இடங்களில் வெற்றி பெற்று 3வது பெரிய கட்சியாக திகழ்ந்தது.
 • 2011
  தமிழ்நாட்டின் சட்டமன்ற பொதுதேர்தலில் அஇஆதிமுக கூட்டணியில் 234 தொகுதியில் 203 இடங்களில் வெற்றி பெற்றது. 160 இடங்களில் போட்டியிட்ட 146 இடங்கள் வெற்றி பெற்றன. புரட்சிதலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராக பதவியேற்றார்.
 • 2002
  ஆண்டிபட்டியில் நடந்த இடைதேர்தலில் வெற்றி பெற்றுபுரட்சி தலைவி அம்மா முதலமைச்சராக பதவியேற்றார்.
 • 2001
  சட்டமன்ற தேர்தலில் அஇஅதிமுக கூட்டணி 196 இடங்களும், அஇஅதிமுக 141 இடங்களில் போட்டியிட்டு அதில் 132 இடங்களில் வெற்றி பெற்றது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக புரட்சிதலைவி அம்மா பதவியேற்றார்.
 • 1996
  அஇஅதிமுக சட்டமன்ற தேர்தலில் வெற்றியை இழந்தது.
 • 1991
  சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிட்ட அஇஅதிமுக – காங்கிரஸ் கூட்டணி 225 இடங்களில் வெற்றி பெற்றது. தமிழ்நாட்டின் இரண்டாவது பெண் முதலமைச்சர் என்ற பெருமை புரட்சிதலைவி அம்மா அவர்களையே சேரும்.
 • 1989
  சட்டமன்ற தேர்தலின்போது போடிநாயக்கனூர் தொகுதியில் புரட்சிதலைவி அம்மா அவர்கள் வெற்றி பெற்றார்.எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தை பெற்ற முதல் பெண் ஆனார். புரட்சிதலைவி அம்மா பிளவுப்பட்டிருந்த கட்சியை ஒன்றிணைத்து,இரட்டை இலை சின்னத்தை மீட்டு எடுத்தார்.மருங்கபுரி சட்டமன்ற இடைதேர்தலில் அஇஅதிமுக வெற்றி பெற்றது..
 • 1988
  அஇஅதிமுக பொதுச்செயலாளராக புரட்சிதலைவி அம்மா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சி பிரிந்து திருமதி ஜானகி அம்மையார் அணியாகவும், புரட்சிதலைவி அம்மா அவர்களின் அணி என்று இரண்டாக பிரிந்தது. புரட்சிதலைவி அம்மா அவர்களுக்கு சேவல் சின்னம் தரப்பட்டது.
 • 1986
  புரட்சி தலைவர்,புரட்சி தலைவி அம்மா அவர்களிடம் செங்கோலை கொடுத்தார்.
 • 1985
  புரட்சி தலைவி அம்மா மீண்டும் கொள்கைபரப்பு செயலாளராக தேர்ந்தேடுக்கப்பட்டார்.
 • 1984
  மாநிலங்களின் உறுப்பினராக புரட்சி தலைவி அம்மா அவர்கள் தேர்ந்தேடுக்கப்பட்டார். புரட்சிதலைவர் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டிருந்தார். புரட்சி தலைவி அம்மா அவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
  அஇஅதிமுக தேர்தலில் வெற்றி பெற்றது. புரட்சி தலைவர் 3வது முறையாக முதலமைச்சராக தேர்ந்தேடுக்கப்பட்டார். புரட்சி தலைவி அம்மா கொள்கைப் பரப்பு செயலாளராக பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
 • 1983
  புரட்சி தலைவி அம்மா கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளராக தேர்ந்தேடுக்கப்பட்டார்.
 • 1982
  புரட்சி தலைவி அம்மா அவர்களை அஇஅதிமுக உறுப்பினராக புரட்சி தலைவர் கட்சியில் இணைத்தார்.
 • 1980
  3 ஆண்டுகளுக்குள் சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டது. அஇஅதிமுக 129 தொகுதிகளில் வெற்றி பெற்று புரட்சி தலைவர் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார்.
 • 1977
  அஇஅதிமுக நாடாளுமன்ற தேர்தலில் 18 தொகுதிகளை வென்றது. சட்டமன்ற தேர்தலிலும் 127 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக புரட்சி தலைவர் தேர்ந்தேடுக்கப்பட்டார்.
 • 1976
  புரட்சி தலைவர் “அனைத்து இந்திய” என்ற பெயரை கட்சி பெயரோடு இணைத்தார். அன்று முதல் கட்சி “அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்” என்று அழைக்கபட்டது. ஊழல் குற்றச்சாட்டு காரணமாக திமுக அரசு Dismiss செய்யப்பட்டது.
 • 1973
  ADMK announces the two leaves as its symbol. Wins the parliament by- election in Dindugul Constituency.
 • 1972
  பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவிற்குப்பின், திமுக வில் நடந்த ஊழலை கண்டுப்பிடித்தார். “அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்” என்ற கட்சியை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் துவங்கினார்.
 • 1949
  அண்ணா என்று அழைக்கப்பட்ட C.N.அண்ணாதுரை திராவிட கழகத்தில் இருந்து பிரிந்து “திராவிட முன்னேற்றக் கழகம்” தோற்றுவித்தார்.
 • 1944
  நீதிக்கட்சியும், பெரியார் அவர்களால் 1925 இல் நிறுவப்பட்ட சுய மரியதை இயக்கமும் கைகோர்த்து திராவிட கழகமாக உருவெடுத்தது.
 • 1920
  நீதிக்கட்சி வெற்றி பெற்று 1937 வரை ஆட்சியில் இருந்தது.
 • 1916
  தியாகராய செட்டி, Dr.C.நடேச முதலியாரால் நீதிக்கட்சி உருவாக்கப்பட்டது. சமூக சமத்துவம், நீதியும் இவர்களது நோக்கங்களாக இருந்தன.
பகிர்